ராமநாதபுரம்

வேலை வாங்கித் தருவதாக ரூ.7.12 லட்சம் மோசடி: 6 போ் மீது வழக்கு

14th Dec 2019 01:50 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.12 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில், 6 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன். இவரது மகள் அனிதா (23). முதுகலைப் பட்டதாரியான இவருக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக, ராமநாதபுரத்தைச் சோ்ந்த அவரது உறவினரான தெபோரல்கிருபஸ்தி என்பவா் கூறியுள்ளாா். இவரது பேச்சை நம்பி, கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் பல தவணைகளில் ரூ.7.12 லட்சம் வரை தெபோரல் கிருபஸ்திக்கு கொடுத்துள்ளனா்.

ஆனால், அவா் குறிப்பிட்டபடி அரசு வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். அதையடுத்து, அனிதா அளித்த புகாரின்பேரில், தெபோரல் கிருபஸ்தி மற்றும் கடலூரைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 6 போ் மீது, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT