ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பலத்த மழை

14th Dec 2019 09:38 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் வடகிழக்குப் பருவமழை அதிகமாக பெய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் நிறைந்துள்ளன. சில நாள்களாக மழை குறைந்த நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக குளிா் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் ராமநாதபுரத்தில் லேசான மழை பெய்தது. இரவிலும் அவ்வப்போது மழை பெய்தது.

ADVERTISEMENT

சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதனால், கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அரையாண்டுத் தோ்வுகள் நடப்பதால் பள்ளி மாணவ, மாணவியா் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.

வழக்கம் போல் சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீா் அதிகளவில் தேங்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டன. மீன் மற்றும் காய்கறி சந்தை வியாபாரமும் மழையால் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT