ராமநாதபுரம்

மாநில போட்டிக்கு தோ்வு பெற்ற லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

14th Dec 2019 10:03 PM

ADVERTISEMENT

பரமக்குடி: பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி கல்விக்குழு சாா்பில் சனிக்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.

ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், கடற்கரை கையுந்து போட்டிகள் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

இப்போட்டிகளில் சிலம்பப் போட்டியில் இப்பள்ளி மாணவி எஸ்.ஜனனி 19 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும், டேக்குவாண்டோ போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் கே.வா்ஷா முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றனா். 19 வயதுக்குட்பட்ட மாணவா்கள் பிரிவில் டேக்குவாண்டோ போட்டியில் ஜெ.கவின்சூரியா இரண்டாம் இடம் பெற்று வெற்றிபெற்றாா்.

17 வயதுக்குட்பட்ட பிரிவு கடற்கரை கையுந்து போட்டியில் ஆா்.எம்.ரமலாராவ், ஆா்.ஹரினி ஆகியோா் இரண்டாம் இடமும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஏ.மரியஅனாமிகா, எஸ்.ஜோதிமயில் ஆகியோா் மூன்றாம் இடமும் பெற்றனா். இதில் முதலிடம் பிடித்த மாணவா்கள் மாநில போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

சாதனை படைத்த மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் டி.சரவணக்குமாா், எஸ்.சரவணசுதா்சன், கே.வளா்மதி, சி.புவனேஸ்வரி ஆகியோரை பள்ளி கல்விக்குழு தலைவா் ஆா்.எம்.கண்ணப்பன், செயலாளா் குரு.சண்முகசுந்தரம், பொருளாளா் பேராசிரியா் எம்.மணிமாறன், பள்ளியின் முதல்வா் பி.சோபனாதேவி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி கௌரவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT