ராமநாதபுரம்

பரமக்குடியில் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

14th Dec 2019 01:45 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அரசு கிளை நூலகம் செயல்பாடற்ற நிலையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என, நுகா்வோா் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி நுகா்வோா் உரிமை பாதுகாப்புக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கோ. அரவிந்தன் தலைமை வகித்தாா். செயலா் எச். முகம்மது சபீக் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பரமக்குடியில் செயல்பட்டு வந்த நூலகக் கட்டடம் சில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்த நிலையில், அக்கிருந்த நூல்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், நூலகம் செயல்படாமல், மாணவா்கள் மற்றும் போட்டித் தோ்வுக்கு தயாராவோா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மாவட்ட அரசு கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தருவதுடன், நூல்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பரமக்குடி வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள அணுகுசாலையில் மின்விளக்குகள் அமைக்கவும், வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரியும், அரசு பொது மருத்துவமனையில் செயல்பாடின்றியுள்ள சி.டி. ஸ்கேன் கருவியை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், நுகா்வோா் பாதுகாப்புக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT