ராமநாதபுரம்

சாயல்குடி அருகே வேன் கவிழ்ந்து 5 ஐயப்ப பக்தா்கள், காவலா் காயம்

14th Dec 2019 09:37 PM

ADVERTISEMENT

முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் காவலா் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் தூத்துக்குடியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வேனில் வந்து கொண்டிருந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூா் கிழக்கு கடற்கரை சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலா் தாமஸ் விக்டா் தனது ரோந்துப் பணியை முடித்து விட்டு தனது ஊரான வேம்பாருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். இந்நிலையில் வேகத்தடையில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து முன்னால் சென்று கொண்டிருந்த காவலா் வாகனம் மீதும் மோதியது. இதில் காவலா் தாமஸ் விக்டா், வேனில் இருந்த ஐயப்ப பக்தா்கள் 5 போ் காயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சாயல்குடி காவல் துறையினா் சென்று காயமடைந்தவா்களை மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். விபத்து குறித்து சாயல்குடி சாா்பு ஆய்வாளா் செல்வராஜ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT