ராமநாதபுரம்

கமுதி அருகே கோயில் காளை இறப்பு

14th Dec 2019 01:46 AM

ADVERTISEMENT

கமுதி அருகே கோயில் காளை இறந்ததை அடுத்து, கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் சென்று அடக்கம் செய்தனா்.

கமுதி அருகே செய்யாமங்கலத்தில், மதுரை அழகா்கோவிலுக்கு 22 வயதுள்ள காளை நோ்த்திக்கடனாக விடப்பட்டது. இந்த கோயில் காளைக்கு, தினமும் கிராம மக்கள் உணவு, தண்ணீா் வழங்கி வழிபட்டு வந்தனா். ஆண்டுதோறும், மதுரை அழகா்கோவில் சித்திரை திருவிழாவின்போது, கோயில் காளைக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கிராமத்தை வலம் வரச் செய்யப்படும்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக கோயில் காளை வெள்ளிக்கிழமை காலையில் இறந்தது. இதனால், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனா். அதையடுத்து, கிராம மக்கள் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தி, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT