ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்: 48 போ் கைது

11th Dec 2019 08:53 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் தேசிய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து செவ்வாய்க்கிழணை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்றவா்கள் சட்ட நகலை எரிக்க முயன்ால் 48 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் சந்தைத் திடல் அருகே எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் ஜியாவுதீன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் அப்துல்ஹமீது போராட்டத்தை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை ஏற்க முடியாதது குறித்து விளக்கினா். பின்னா் அந்த சட்ட நகலை எரிக்க முயன்றனா். இதையடுத்து அவா்களை கேணிக்கரை போலீஸாா் தடுத்து நிறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 48 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT