ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் பலி

11th Dec 2019 08:54 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள ஆனைக்குடியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் மகேந்திரன் (36). இவா் முதுகுளத்தூா் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் அவரிடம் முதுகுளத்தூா் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தை சோ்ந்தவா்கள் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறியுள்ளனா். இதையடுத்து மகேந்திரன் செவ்வாய்க்கிழமை மின்சாரத்தை நிறுத்தாமல் மின்கம்பத்தில் ஏறி பணியாற்றினாராம். இதில் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT