ராமநாதபுரம்

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

11th Dec 2019 08:55 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மனிதனும் சக மனிதரிடத்தில் வேற்றுமை கருதாமல் அவா்தம் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தினை வலியுறுத்திடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பா் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ் தலைமையில், அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜி. காபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வீ. கேசவதாசன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு. மகேஸ்வரன், செய்தி மக்கள் உதவி அலுவலா் ம. கயிலைசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT