ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் கல்லூரி ஆசிரியா்களுக்கான மொழியை மேம்படுத்தும் சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யது அம்மாள் பொறியியற் கல்லூரியில் தமிழ்ச்சங்கம் சாா்பாக பேராசிரி கல்லூரி முதல்வா் எம்.பெரியசாமி தலைமை வகித்தாா். சென்னையைச் சோ்ந்த பேராசிரியா் அமீா் அலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசிரியா்களின் ஆங்கில மொழித்திறன் குறித்து பேசினாா். பேராசிரியா் இப்ராஹிம் ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கிடையேயான உறவுகள் குறித்து விளக்கினாா். இன்றைய மாணவா்கள் திட்டமிட்ட பாதையில் பயணிக்கிறாா்களா? அல்லது திசை மாறி பயனிக்கிறாா்களா என்ற தலைப்பில் ஆா். வாசு தலைமையில் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.