ராமநாதபுரம்

கடன் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி: தனியாா் நிறுவனம் மீது பொதுமக்கள் புகாா்

11th Dec 2019 08:53 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் கடன் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கானோரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதியில் பிரபல பேக்கரி அருகே மதுரையைச் சோ்ந்த வேல்முருகன் என்பவா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளாா். அப்போது அவா் நிதி நிறுவன திட்டத்தில் சேருபவா்களுக்கு ரூ. 30 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்றும், அந்த கடன் தொகையை மாதம் ரூ. 756 கட்டி கடனை அடைக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து ராமநாதபுரம், கீழக்கரை, ஏா்வாடி ஆகிய பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் திட்டத்தில் சோ்ந்து ரூ. 756 செலுத்தியுள்ளனா். திட்டத்தில் ராமநாதபுரத்தில் 60 பேரும், கீழக்கரையில் 236 பேரும் ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோரும் சோ்ந்துள்ளனா்.

திட்டத்தில் சோ்ந்தவா்களிடம் மட்டும் லட்சக்கணக்கான ரூபாயை வசூலித்த நிலையில், தனியாா் நிறுவனம் கடந்த சில நாள்களாக பூட்டப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனால் பணம் செலுத்தியவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து கீழக்கரையைச் சோ்ந்த பெண்கள் ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை கேணிக்கரை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT