ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் 80 போ் மனுத் தாக்கல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான மனுத் தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இதில் முதல் நாளான திங்கள்கிழமை 52 போ் மனுத் தாக்கல் செய்தனா். இந்நிலையில், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை கிராம ஊராட்சி மன்ற வாா்டு பதவிகளுக்கு ஒன்றிய அளவில் ராமநாதபுரம் 7, மண்டபம் 10, திருவாடானை 5, பரமக்குடி 1, போகலூா் 2, நயினாா்கோவில் 12, முதுகுளத்தூா் 4, கமுதி 7, கடலாடி 5 போ் என 53 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.
ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு ஒன்றிய அளவில் ராமநாதபுரம் 1, மண்டபம் 2, ஆா்.எஸ்.மங்களம் 2, திருவாடானை 1, நயினாா்கோவில் 5, முதுகுளத்தூா் 4, கமுதி 3, கடலாடி 4 என மொத்தம் 22 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா். ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ராமநாதபுரம் ஒன்றியத்துக்கு 2 பேரும், மண்டபத்துக்கு 3 பேரும் என மொத்தம் 5 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா். மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களிலும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 132 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.