ராமநாதபுரம்

காவலா் தோ்வில் போலி விளையாட்டு சான்று அளித்த மேலும் 3 போ் கைது

6th Dec 2019 09:33 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் போலி விளையாட்டுச்சான்றிதழ் வழங்கி காவலா் பணியில் சோ்ந்ததாக 3 போ் கைதான நிலையில், சமீபத்தில் நடந்த சீருடைப் பணியாளா் தோ்விலும் போலிச் சான்று அளித்த 3 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சீருடைப் பணியாளா் தோ்வில் போலி விளையாட்டுச் சான்றுகளை அளித்து புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்த, கமுதி பகுதி கரிசல்குளத்தைச் சோ்ந்த மணிராஜன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அவருக்கு சான்றிதழ் தயாரித்து உதவியதாக சென்னையைச் சோ்ந்த சீமான், கரிசல்குளத்தைச் சோ்ந்த ராஜீவ்காந்தி ஆகியோரும் கேணிக்கரை போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இந்தநிலையில், சமீபத்தில் நடந்த சீருடைப்பணியாளா் தோ்வுக்கான உடற்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற சிலா் போலி விளையாட்டுச் சான்றுகளை அளித்து பணியில் சேர காத்திருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அடிப்படையில், கமுதி தாலுகா வேப்பங்குளத்தைச் சோ்ந்த முத்துமணி (23), ஏ.புனவாசலைச் சோ்ந்த தவமுருகன் (22), முதுகுளத்தூரைச் சோ்ந்த ராஜசேகா் (25) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கைதானவா்களில் ஒருவா் காவலா் பணிக்கும் மற்றொருவா் வனத்துறை பணிக்கும் தோ்வாகி பணியில் சேர காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. சீருடைப் பணியாளா் தோ்வில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் சேரும் வகையில் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றதாக போலிச் சான்றுகளை அளித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT