ராமநாதபுரம்

கமுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

6th Dec 2019 09:30 AM

ADVERTISEMENT

கமுதியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி கோட்டைமேட்டைச் சோ்ந்தவா் பெரியசாமி மகள் கலையரசி (19). இவா் கோட்டைமேடு தேவா் நினைவுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் கமுதி போலீஸாருக்கு தெரிவித்தனா். இதனையடுத்து கலையரசியின் சடலத்தை மீட்ட போலீஸாா், கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT