ராமநாதபுரம் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.30) பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்டவை குறித்து விவாதிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.