ராமநாதபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி

28th Aug 2019 08:56 AM

ADVERTISEMENT

சாயல்குடியில்  வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ விழிப்புணர்வு  பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
      பேரணிக்கு வட்டார கல்வி அலுவலர் சண்முகம்  தலைமை வகித்தார். வட்டாரவள மைய மேற்பார்வையாளர் செந்தில்ராணி முன்னிலை வகித்தார். பேரணியில் 18 வயது நிரம்பிய மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கு அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள், மருத்துவ உதவிகள், மருந்துகள், தேசிய அடையாள அட்டை பெறுதல், உபகரணங்கள்பெறுதல் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்திக்கொண்டு  மாணவ, மாணவியர்கள் முழக்கங்களை எழுப்பிவாறு சென்றனர்.  
    அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. பேரணிக்கான ஏற்பாடுகளை  ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT