தர்மபுரி மாவட்டம் பிக்கம்பட்டியில் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரத்தில் மருத்துவர் சமூக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ராமநாதபுரம் நகர் கிளை தலைவர் ஜி.உமாநாத் தலைமை வகித்தார். செயலர் டி.எம்.பழனி, பொருளாளர் ஆர்.முருகபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.நடேசனார் கண்டன உரையாற்றினார். சங்க மாநிலப் பொதுச்செயலர் ஏ.ராஜன், மாநிலப்பொருளாளர் எஸ்.குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர்.
காதல் பிரச்னையில் பிக்கம்பட்டி கிராமத்தில் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். காளிதாஸ் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முழக்கங்களை எழுப்பினர்.