பரமக்குடி காந்திசிலை முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் முருகநாதன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் ராஜேஷ் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோக், பொருளாளர் பொன்னையா, அவைத்தலைவர் கதிர்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் பத்மாவதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர் வேணுராம் கலந்து கொண்டு 700-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான வாழ்வாதார உபகரணங்களை வழங்கினார். விழாவில் கட்சியின் நகர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.