ராமநாதபுரம்

பரமக்குடியில் மோட்டார் பொருத்திய  சுமை ஏற்றும் சைக்கிள் பறிமுதல்

28th Aug 2019 08:52 AM

ADVERTISEMENT

பரமக்குடியில் உரிய அனுமதி பெறாமல் சரக்குகள் ஏற்றும் மோட்டார் பொருத்தி இயக்கி வந்த சுமை ஏற்றும் சைக்கிள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கட்டுமான பொருள்கள் மற்றும் சரக்குகள் ஏற்றுவதற்காக மோட்டார் பொருத்திய சுமை ஏற்றும் சைக்கிள்கள் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகன சட்டப்படி 25 சி.சி. என்ஜின் பொருத்தப்பட்டிருந்தால் விதிமுறைப்படி அந்த வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளரால் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்ட பின்னரே இயக்க அனுமதிக்கப்படும்.  
ஆனால் இப்பகுதியில் சுமை ஏற்றும் சைக்கிள்களை பயன்படுத்துபவர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் 75 சி.சி.க்கும் அதிகமான இன்ஜின் பொருத்திய வாகனத்தை பதிவே இல்லாமல் இயக்கி வருகின்றனர். 
இதுகுறித்து புகாரின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் நகர் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது 10-க்கும் மேற்பட்ட மிளகாய் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இதுபோன்ற இயக்கும் சுமை ஏற்றிச்செல்லும் வாகனங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT