கமுதி தாலுகாவுக்குள்பட்ட கீழராமநதி, மேலராமநதி, மரக்குளம் ஆகிய 3 கிராமங்களில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம், வட்டாட்சியர் மீனலோசனி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மண்டல துணை வட்டாட்சியர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். இதில், முதியோர் உதவித் தொகை கோரி 41, சாலை வசதிக்காக 6, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கக் கோரி 7 என மொத்தம் 54 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாட்சியர் மீனலோசனி தெரிவித்தார்.
முகாமில், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவண்ணன் (மேலராமநதி), செந்தூர்பாண்டி (கீழராமநதி), நிர்மலா (மரக்குளம்) உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, வருவாய் ஆய்வாளர் கீதா வரவேற்றார்.