ராமநாதபுரம்

சாயல்குடியில் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

27th Aug 2019 07:38 AM

ADVERTISEMENT

சாயல்குடி பேருந்து நிலையத்தில்  பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாயல்குடி பேருந்து நிலையம், காமராஜர் சிலை எதிரில்  குற்றங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 
தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து, பல மாதங்களாக செயல்பாடின்றி  காட்சிப் பொருளாக கிடக்கிறது. 
கேமாராக்கள்  செயல்பாடாமல் இருப்பதால் திருட்டு கும்பல் சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் தங்களது கை வரிசையை காட்ட வாய்ப்பு உள்ளது. 
மேலும் இரவு நேரங்களில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் நலன் கருதி செயல்பாடின்றி உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT