ராமநாதபுரம்

பரமக்குடியில் பார்வர்டு பிளாக்  கட்சியினர் ஆர்ப்பாட்டம்

23rd Aug 2019 07:01 AM

ADVERTISEMENT

பரமக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
      பரமக்குடி காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் கே.பி. லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலர்கள் சண்முகவேல், கா. தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
     ஆர்ப்பாட்டத்தில், மத்திய-மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை நிறுத்திடக் கோரியும், மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் பால் விலை உயர்வைக் குறைத்திடக் கோரியும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.     இதில், கட்சியின் ஒன்றியச் செயலர்கள் சங்கர், செல்வம், ஒன்றிய இளைஞரணி கனகராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பரமக்குடி நகரச் செயலர் கார்த்திக் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT