ராமநாதபுரம்

திருவாடானையில்  பலத்த மழை

18th Aug 2019 12:59 AM

ADVERTISEMENT


திருவாடானை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாடானை பகுதிகளான சி .கே .மங்கலம்,திருவாடானை, தொண்டி, நம்புதாளை, கீழ்க்குடி, திருவெற்றியூர், அச்சங்குடி, கடம்பாகுடி,கீழ்பாம்பூர், குளத்தூர், மேல அரும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  கடந்த சில மாதங்களாக கடும் வெயில் காரணமாக வெப்பமாக காணப்பட்டது. இந்நிலையில் குளம், குட்டை, கண்மாய்கள் வறண்டு கடும் தண்ணீர் தட்டுபாடு நிலவியது, இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திருவாடானை பகுதியில் பலத்த மழை பெய்தது. தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.  
முதுகுளத்தூர்: கடலாடி, முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் மழை பெய்தது.
கடலாடி, முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதுமான மழை பெய்யாததால் கடுமையான வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இந்நிலையில் கடந்த 2 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும்  மழை காரணமாக பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றது. இம்மழை காரணமாக இப்பகுதியில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து மழை பெய்தததால், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டனர். 
கமுதி:   இதே போல் கமுதி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் பணியைத் தொடங்கினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT