ராமநாதபுரம்

பரமக்குடியில் தேரோட்டம்

16th Aug 2019 07:42 AM

ADVERTISEMENT

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிபிரமோத்சவ விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. 
 பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில் கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பெருமாள் ரிஷபம், குதிரை, காமதேனு உள்ளிட்ட  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் ரத வீதிகளில் தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. தேர் ரத வீதிகளில் வலம் வந்து நண்பகல் 1.30 மணிக்கு கோயிலை வந்தடைந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT