ராமநாதபுரம்

மன்னார் வளைகுடாவில் சூறைக் காற்று: 10 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை: மீன்பிடித் தொழில் முடக்கம்

11th Aug 2019 04:34 AM

ADVERTISEMENT


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசுவதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் 10 ஆவது நாளாக மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் சனிக்கிழமை தடை விதித்தனர். இதனால் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். 
இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்தனர். ஆனால் சனிக்கிழமையும் ஆழ்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டருக்கு அதிகமாக காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தியது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, மீன்வளத்துறையினர் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு வழங்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட வில்லை. இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 30 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து 10 நாள்களாக தொடர்ந்து மீன்பிடிக்க செல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 
மேலும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ராமேசுவரம் உள்ளிட்ட அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT