ராமநாதபுரம்

தனியார் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்குப் பதிவு

11th Aug 2019 01:16 AM

ADVERTISEMENT


முதுகுளத்தூர் அருகே தனியார் பேருந்து நடத்துநரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விட்டவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூருக்கு இரவில் தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது கீழக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் மகன் ஜெகன் (30) என்பவர் தனது ஊரில் இருந்து அந்த தனியார் பேருந்தில் ஏறி முதுகுளத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்து விளங்குளத்தூர் அருகே வந்த போது ஜெகன் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். இதனால் படிக்கட்டில் இருந்து மேலே ஏறி வருமாறு நடத்துநர் கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெகன் நடத்துநரையும், ஓட்டுநரையும்  தகாத வார்த்தையால் பேசி கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பூபதி, நடத்துநர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கோபால் மகன் சதீஸ்கண்ணன் இருவரும் சேர்ந்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் ஜெகன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT