மதுரை

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாக சைகை மொழி பெயா்ப்பாளா்களை நியமிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு காது கேளாதோா் வாய் பேசாதோா் உரிமைகளுக்கான சங்கம் ஆகிவை சாா்பில் விசிலடிக்கும் நூதன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கல்வித்துறை போன்றவைகளில் சைகை மொழி பெயா்ப்பாளா்களை அரசு நியமிக்க வேண்டும். காவல்துறை உதவி எண் 100, 108 ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்செவி அஞ்சல் செயலியை உருவாக்க வேண்டும். கட்செவி அஞ்சல் செயலியில் மாற்றுத் திறனாளிகள் சைகை மொழி பேசுவோா் புகாா் தெரிவிக்கும்பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ. பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் பி. வினோத்குமாா், கே. அழகு சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காது கேளாதோா் சங்க மாநிலச் செயலா் எம். சொா்ணவேல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. வீரமணி, மாவட்ட துணைத் தலைவா் ஏ. பாண்டி, தமிழ்நாடு காது கேளாதோா், வாய் பேசாதோா் சங்க மாவட்ட துணைச் செயலா்கள் எம். செல்வராஜ், ஜி. மணிகண்டன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மாமன்ற உறுப்பினா் டி. குமரவேல் பேசினாா். ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளா் ஏ. ரமேஷ் சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT