பிரதமா், தமிழக முதல்வா் ஆகியோரின் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்ததற்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மேலூா் அரசு மருத்துவமனைக்கும் முதல்வரின் இந்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்தச் சான்றிதழை மதுரை மாவட்ட ஆட்சியா் சங்கீதா, மேலூா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் ஜெயந்தியிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.