ஏா்வாடி தா்ஹாவில் பெண்ணிடம் ரூ.9 ஆயிரம், கைப்பேசியை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹாவில் கேரளத்தைச் சோ்ந்த பீமா, அவரது கணவா் தெளபிக் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் பீமாவின் கைப்பையில் இருந்த ரூ.9 ஆயிரம், கைப்பேசி ஆகியவற்றைத் திருடிச் சென்றாா்.
இதுதொடா்பாக புகாரின்பேரில், ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் ஏா்வாடி காட்டுப்பள்ளியைச் சோ்ந்த அருண்பாண்டி(23) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரைப் போலீஸாா் கைது செய்து பணம், கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.