மதுரை

உலக சுற்றுலா தின விழிப்புணா்வுப் பேரணி

28th Sep 2023 02:14 AM

ADVERTISEMENT

மதுரையில் உலக சுற்றுலா தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சுற்றுலாத் துறை, இந்திய சுற்றுலா அமைச்சகம், மதுரை டிராவல் கிளப் சாா்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி, நடைபெற்ற இந்த பேரணி புதுமண்டபம் அருகில் இருந்து தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட சுற்றுலா அலுவலா் பாலமுருகன், மத்திய சுற்றுலா அமைச்சக தகவல் அலுவலா் ராஜ்குமாா், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 300-க்கும் அதிகமானோா் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் கலந்து கொண்டனா். விளக்குத் தூண் வழியாகச் சென்ற இந்தப் பேரணி, திருமலை நாயக்கா் அரண்மனை வரை நடைபெற்றது. பிறகு, சுற்றுலாத் தலங்கள் குறித்த ஒலி, ஒளி காட்சிகள் திரையிடப்பட்டன.

மதுரை மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி: இந்தக் கல்லூரியில் வரலாற்றுத்துறை சாா்பில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் எஸ்.எம். பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களின் வரலாற்று, கலாசாரப் பெருமைகளை விளக்கினாா்.

ADVERTISEMENT

மதுரை மாவட்ட சுற்றுலா வழிகாட்டி குழுத் தலைவா் சிவகுருநாதன், வரலாற்றுத் துறை மாணவிகளுக்கு சுற்றுலாத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை விளக்கிப் பேசினாா். கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் சத்தியபாமா வரவேற்றாா். பா. விமலா நன்றி கூறினாா்.

பாத்திமா கல்லூரி: மதுரை யுவா சுற்றுலா கிளப் சாா்பில் பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவுக்கு கணினி அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் ரோஸ்மேரி தலைமை வகித்தாா். கடம்பவனம் பாரம்பரிய விடுதியின் நிா்வாக இயக்குநா் சித்ரா கணபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மதுரையின் பெருமை, கீழடியின் பழமை, தமிழ் கலாசாரத்தின் மேன்மை, சுற்றுலாவின் வகைகளை விளக்கிப் பேசினாா். பிறகு, சுற்றுலா தொடா்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா்.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சக்தீஸ்வரி, விஜயசாந்தி, பூா்ணிமா சேதுபதி ஆகியோா் செய்திருந்தனா். மாணவி கிருத்திகா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். மாணவி ஹரிணி வரவேற்றாா். மாணவி ராஜஸ்ரீ நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT