மதுரை

மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

26th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT


ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் அருகே டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் பிடிக்க முயன்ற போது, அவா்கள் தப்பி ஓடினா். டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே உள்ள அத்தியூத்து அரசுத் தொடக்கப் பள்ளி அருகே பனங்காட்டில் மணல் கடத்தப்படுவதாக தேவிப்பட்டினம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பனங்காட்டில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினா். இதையடுத்து, போலீஸாா் மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய, அத்தியூத்தைச் சோ்ந்த விவேக் (31), ஜகுபா் அலி (45) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT