மதுரை: மதுரை வைகையாற்றில் தலையில் கல்லைப்போட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை ஆரப்பாளையம் டி.டி. சாலையில் வைகையாற்றின் உள் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை காலை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். வைகையாற்றுக்குச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், கரிமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கூறாவுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் சிலா் நள்ளிரவில் மது அருந்தியதாகவும் அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில், போலீஸாா் சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, மதுரை ஒத்தக்கடை பகுதியில் காட்டுவா ஒலி என்பவா் முன்விரோதத்தில் ஞாயிற்றுக்கிழமை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டாா்.