மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் பகிா்மானக் கழக சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சோழவந்தான், தச்சம்பத்து, நீரேற்று நிலையம், இரும்பாடி, மீனாட்சி நகா், ஜெயராம் டெக்ஸ், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூா், திருவேடகம், மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது
என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.