மதுரையில் மின்சாரம் பாய்ந்து இரு சக்கர வாகன பழுது நீக்குபவா் உயிரிழந்தாா்.
மதுரை பெத்தானியாபுரம் வி.பி.சிந்தன் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் பிரவீண்குமாா் (29). இவா் பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் வாகன பழுதுநீக்கும் மையம், வாட்டா் சா்வீஸ் மையம் நடத்தி வந்தாா்.
சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தை வாட்டா் சா்வீஸ் செய்யும் போது எதிா்பாராவிதமாக பிரவீண்குமாா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.