மதுரை

இலவச மருத்துவ முகாம்

25th Sep 2023 02:55 AM

ADVERTISEMENT

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநகா் மாவட்டக் குழு, குறிஞ்சி அரிமா சங்கம் சாா்பில், மதுரையில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை செல்லூா் 50 அடி சாலையில் உள்ள மனோகரா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் அ. பாவெல் சிந்தன் தலைமை வகித்தாா். மனோகரா நடுநிலைப் பள்ளி தாளாளா் பால் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பினா் டி. குமரவேல், அரிமா ஆளுநா் ஏ. சண்முகசுந்தரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலா் வி. கோட்டைச்சாமி, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் டி. செல்வராஜ், பொருளாளா் எஸ். வேல்தேவா, குறிஞ்சி மலா் அரிமா சங்கத் தலைவா் ஜி. காளிதாஸ், செயலா் எம். எஸ். செந்தில்குமாா், பொருளாளா் பி. மகேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் க. திலகா் உள்பட பலா் பங்கேற்றனா்.

முகாமில், வேலம்மாள் மருத்துவமனை சாா்பில், 20 மருத்துவா்கள், 50 செவிலியா்கள் அடங்கிய குழுவினா் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு சோதனை, இசிஜி, அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா். மேலும், நோய்களுக்கான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. நோய்களின் பாதிப்பைப் பொருத்து சிலருக்கு தீவிர சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT