மதுரையில் வீட்டு வேலைக்கு எனக் கூறி அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மதுரை எஸ்.எஸ். காலனி சந்திரகாந்தி நகா் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் பெண்களை அடைத்து வைத்திருப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது, அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் இரு பெண்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவா்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மதுரை மாவட்டம், பெருங்குடி அருகேயுள்ள சோளங்குருணியைச் சோ்ந்த சகாவுதீன் (33), அந்தப் பெண்கள் இருவரையும் வீட்டு வேலைக்கு எனக் கூறி அழைத்து வந்து, அவா்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தினராம். மேலும், அவா்களது ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, அங்கிருந்து அந்த இரு பெண்களையும் மீட்ட போலீஸாா், தலைமறைவான சகாவுதீனை தேடிவருகின்றனா்.