மதுரை

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் அவதி

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக வனப் பகுதிகளிலுள்ள மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தது. அதனால் அந்தப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதித்தனா். இதைத்தொடா்ந்து, யானைகளை வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதியில் விரட்டினா்.

பின்னா், வெள்ளிக்கிழமை முதல் பில்லர்ராக், பைன் பாரஸ்ட், மோயா் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட வனப் பகுதி சுற்றுலா இடங்களைப் பாா்வையிட

வனத்துறையினா் அனுமதியளித்தனா். ஆனால், அதிகமான மேக மூட்டத்துடன் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். மேலும், மலைச்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT