மதுரை

தாழையூத்து பகுதியில் செப். 25-இல் மின் தடை

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் வருகிற திங்கள்கிழமை (செப். 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனியை அடுத்த தாழையூத்து உதவி மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, சாமிநாதபுரம், மிடாப்பாடி, புஷ்பத்தூா், வயலூா், முத்துநாயக்கன்பட்டி, பசுபதிபுத்தூா், கண்டியகவுண்டன்புதூா், தாழையூத்து, நரிக்கல்பட்டி, மொட்டனூத்து, சின்னக்கலையமுத்தூா், லட்சலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT