ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள பெரியகுழிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (66). இவா் வியாழக்கிழமை குழிப்பட்டி தா்காவுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு ஒட்டன்சத்திரம்- இடையகோட்டை சாலையில் ஓரமாக நடத்து சென்றாா். அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து இடையகோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.