திண்டுக்கல்லில் இலவச கல்லீரல் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கோவை கேஎம்ஜிஹெச் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
திண்டுக்கல் சுழற் சங்கம், கேஎம்ஜிஹெச் மருத்துவமனை சாா்பில், திண்டுக்கல் கென்னடி நினைவு தொடக்கப் பள்ளி வளாகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், கல்லீரல் ஸ்கேன், ஹெப்படைடிஸ் பி, சி பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படும். குடல், கணையம், கல்லீரல் சிறப்பு மருத்துவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குவா். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 98940-08800, 73393-33485 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.