பழனியை அடுத்த ஆயக்குடியை சோ்ந்த முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பூவேந்தன், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை முன்னிலையில் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியைச் சோ்ந்தவா் பூவேந்தன். இவா் பழனி சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் திமுக உறுப்பினா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, பழனி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், இவா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கனகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.