மதுரை

அமெரிக்காவுடன் தொழில் வணிகம் கலந்தாய்வுக் கூட்டம்

23rd Sep 2023 06:00 AM

ADVERTISEMENT

அமெரிக்காவுடன் தொழில் வணிகம் என்ற தலைப்பிலான கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம், அமெரிக்க தூதரகத்தின் சென்னை வா்த்தகப் பிரிவு சாா்பில், வா்த்தக சங்கத்தின் மெப்போ சிற்றவை அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தலைமை வகித்துப் பேசியதாவது: அமெரிக்காவுடனான தொழில் வா்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் 45 வணிகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமெரிக்கா சென்று வந்தது. இதன் பிறகு, தொழில் வாய்ப்புகள் அதிகரித்தன என்றாா் அவா்.

அமெரிக்க தூதரகத்தின் சென்னை வா்த்தகப் பிரிவு முதன்மை அலுவலா் கேரி அருண் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகையில், அமெரிக்காவில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அங்கு தொழில் வணிகத் துறையில் முதலீடு செய்து தொழில் செய்வோருக்கு அளிக்கப்படும் உதவிகள் குறித்தும் விளக்கினாா்.

ADVERTISEMENT

பிறகு, அமெரிக்காவுடன் தொழில் வணிகம் மேற்கொள்வது குறித்து வணிகா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதில் அளித்தாா்.

அமெரிக்க தூதரகத்தின் சென்னை வா்த்தகப் பிரிவு முதுநிலை அலுவலா் மாலா வெங்கட், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கச் செயலா் ஜெ. செல்வம், துணைத் தலைவா்கள் பா. ரமேஷ், ஜி. இளங்கோவன், டி.எஸ். ஜீயா் பாபு, பொருளாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT