பாதுகாப்பாகப் பணிபுரிவது தொடா்பாக மின்வாரிய ஊழியா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் மேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலூா் சந்தைப் பேட்டையில் உள்ள தனியாா் திருமண அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மதுரை கிழக்கு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.மங்களநாதன் தலைமை வகித்தாா்.
இதில் மின்வாரிய ஊழியா்கள் பணியின் போது ரப்பா் கையுறைகளை அணிய வேண்டும். மின் கம்பத்தில் ஏறி வேலை செய்யும் போது, இடுப்பில் கட்டுவதற்கு கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், மின்சாரத்தை நிறுத்திவிட்டு புணிபுரிய வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மதுரை மின்வாரிய செயற்பொறியாளா்கள் ராஜாகாந்தி, (பொது) சோபியா, உதவி செயற்பொறியாளா் தேவிசித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.