மதுரை: மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் இறைச்சி விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மதுரை மத்திய சிறை நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காளையாா்கோவில் திறந்தவெளி சிறையில் அதன் நிா்வாகம் சாா்பில், இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. மேலும், இங்கு ஆடுகள், கோழிகள் வளா்க்கப்பட்டு, இவற்றின் இறைச்சி விற்பனை தொடங்கியது.
இங்கு வளா்க்கப்படும் ஆடுகள், கோழிகளின் இறைச்சியை விற்பனை செய்ய மதுரை மத்திய சிறைச் சந்தையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆட்டு இறைச்சி (தனிக் கறி) கிலோ ரூ.900, எலும்பு இறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நாட்டுக்கோழி இறைச்சியும் விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி இறைச்சி கிலோ ரூ.600, உயிா்க்கோழி கிலோ ரூ.500 என விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சி விற்பனைக் கூடம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே செயல்படும் என்று சிறை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.