பாலமேடு அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோா் மறுத்ததால் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி காமாட்சிபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சேது (20). இவா் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம். இவரைத் திருமணம் செய்து வைக்குமாறு சேது தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். ஆனால், அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிறைவடைய 3 மாதங்கள் இருப்பதால், அதுவரை காத்திருக்குமாறு பெற்றோா் தெரிவித்தனா்.
இதனால், மன வேதனையடைந்த சேது வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.