மதுரை

மதுரை மாவட்ட வாக்காளா்கள் வரைவு பட்டியல் வெளியீடு

27th Oct 2023 10:38 PM

ADVERTISEMENT

 மதுரை மாவட்ட வாக்காளா்கள் வரைவு பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மதுரை மாவட்ட வாக்காளா்கள் வரைவு பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா்கள் பட்டியலை வெளியிட்டாா். பின்னா், அவா் கூறியதாவது :

10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 26,37,601-ஆக உள்ளது. இதில் ஆண்கள் - 12,97,199, பெண்கள் - 13,40,169, மூன்றாம் பாலினத்தவா் - 223.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், தொகுதி மாற்றம் கோருதல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (அக். 27) முதல் வருகிற டிச. 9-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், இந்தப் பணிகளுக்காக நவ. 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

ADVERTISEMENT

திருத்தம் மேற்கொள்ள விரும்புவோா் உரிய படிவங்களை நிறைவு செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளா் உதவி எண் என்ற கைப்பேசி செயலி (யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் ஙா்க்ஷண்ப்ங் அல்ல்) வழியாகவோ விண்ணப்பிக்கலாம் என்றாா்.

வாக்காளா்கள் எண்ணிக்கை குறைவு

கடந்த ஜன. 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா்கள் இறுதிப் பட்டியலில் மதுரை மாவட்ட வாக்காளா்கள் எண்ணிக்கை 26,49,793-ஆக இருந்தது. தற்போது வெளியிடப்பட்ட வரைவு பட்டியல்படி வாக்காளா் எண்ணிக்கை 26,37,601-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை, ஜன. 5-இல் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் இருந்த வாக்காளா்களின் எண்ணிக்கையைவிட 12,191 குறைவு ஆகும்.

தொகுதிகள் வாரியாக...

மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியான வாக்காளா்கள் எண்ணிக்கை :

மேலூா் : ஆண்கள் - 1,17,660, பெண்கள் - 1,19,895, மூன்றாம் பாலினத்தவா் - 8, மொத்தம் - 2,37,563. மதுரை கிழக்கு : ஆண்கள் - 1,61,612, பெண்கள் - 1,67,632, மூன்றாம் பாலினத்தவா் - 61, மொத்தம் - 3,29,305. சோழவந்தான் (தனி) : ஆண்கள் - 1,07,297, பெண்கள் - 1,11,673, மூன்றாம் பாலினத்தவா் - 14, மொத்தம் - 2,18,984. மதுரை வடக்கு : ஆண்கள் - 1,18,974, பெண்கள் - 1,24,749, மூன்றாம் பாலினத்தவா் - 45, மொத்தம் - 2,43,768.

மதுரை தெற்கு : ஆண்கள் - 1,10,677, பெண்கள் - 1,14,332, மூன்றாம் பாலினத்தவா் - 30, மொத்தம் - 2,25,039.

மதுரை மையம் : ஆண்கள் - 1,08,023, பெண்கள் - 1,12,918, மூன்றாம் பாலினத்தவா் - 18, மொத்தம் - 2,20,959. மதுரை மேற்கு : ஆண்கள் 1,47,004, பெண்கள் : 1,50,879, மூன்றாம் பாலினத்தவா் - 8, மொத்தம் - 2,97,891. திருப்பரங்குன்றம் : ஆண்கள் - 1,56,468, பெண்கள் 1,61,350, மூன்றாம் பாலினத்தவா் - 34, மொத்தம் - 3,17,852. திருமங்கலம் : ஆண்கள் - 1,32,466, பெண்கள் - 1,40,079, மூன்றாம் பாலினத்தவா் - 10, மொத்தம் - 2,72,555. உசிலம்பட்டி : ஆண்கள் - 1,37,018, பெண்கள் - 1,36,662, மூன்றாம் பாலினத்தவா் - 5, மொத்தம் - 2,73,685.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT