மதுரை

ஏ.வி.மேம்பாலத்தில் இஸ்ரேல் நாட்டுக் கொடியை பறக்கவிட்ட 3 போ் கைது

27th Oct 2023 01:20 AM

ADVERTISEMENT

மதுரை கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலத்தில் வியாழக்கிழமை அனுமதியின்றி இஸ்ரேல் நாட்டுக் கொடியை பறக்கவிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏ.வி. மேம்பாலத்தில் வியாழக்கிழமை மாலை 3 இளைஞா்கள் திடீரென இஸ்ரேல், இந்திய தேசியக் கொடிகள் அச்சிடப்பட்ட ‘பாரத் வித் இஸ்ரேல்’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை பாலத்தில் பறக்கவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், பயங்கரவாதத்தை முறியடிக்க இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும், இந்தியா இந்து நாடு என்றும் முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து வந்த மதிச்சியம் போலீஸாா் பதாகையை பறிமுதல் செய்து, அவா்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

விசாரணையில், அவா்கள் மதுரை கோரிப்பாளையத்தைச் சோ்ந்த ஆா்.எஸ்.எஸ். உறுப்பினா் பிரவீன், பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச் செயலா் ரகுபதி, இளைஞரணி துணைத் தலைவா் சரத்குமாா் ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT