மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.08 கோடி

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 1.08 கோடி செலுத்தியிருந்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல்கள், கோயில் இணை ஆணையா் ச. கிருஷ்ணன் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

உதவி ஆணையா், இக்கோயிலின் தக்காரான மதுரை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, கண்காணிப்பாளா்கள், வடக்கு, தெற்கு சரக ஆய்வா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில் 1,08,76,777 கோடி ரூபாய், பலமாற்று பொன் இனங்கள்247 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 749 கிராம், அயல் நாட்டு நோட்டுகள் 258 பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தன என அதில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் ரூ. 23 லட்சம் வசூல்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, அக்டோபா் மாதத்துக்கான காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரொக்கமாக ரூ.23 லட்சத்து 6 ஆயிரத்து 450-ம், 56 கிராம் தங்கம், ஒரு கிலோ 220 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன.

கோயில் துணை ஆணையா் நா. சுரேஷ், தக்காா் பிரதிநிதி ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் இளவரசி ஆகியோா் முன்னிலையில், ஸ்கந்த குரு வேதபாடசாலை மாணவா்கள், ஐயப்ப சேவா சங்கத்தினா், திருக்கோயில் பணியாளா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT