மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் நகைக்கடை ஊழியா் உயிரிழந்தாா்.
அலங்காநல்லூா் அருகேயுள்ள சிக்கந்தா்சாவடி கோல்டன் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (62). இவா் மதுரை தொட்டியன் கிணற்றுத்தெருவில் உள்ள வைர நகை விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை இரவு வீட்டுக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். சிக்கந்தா் சாவடி பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்ற போது, பேருந்தை அதன் ஓட்டுநா் இயக்கியதால், தவறி கீழே விழுந்தாா். இதில் பேருந்தின் பின்சக்கரம் அவா் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் வேல்முருகன் மீது அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.