மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீரென தீக்குளித்த நபரை பெண் காவலா் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதிக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபா் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை திறந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சாலையின் நடுவே அலறியபடி ஓடினாா். இதைக்கண்டு அந்தப் பகுதியிலிருந்து வாகன ஓட்டிகள் திகைத்து நின்ற நிலையில், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலா் அனிதா, ஆட்டோ ஓட்டுநரும் சோ்ந்து உடனடியாக அந்த நபரை மீட்டு, தீயை அணைத்தனா். இதைத்தொடா்ந்து, அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபா் திடீா் நகரைச் சோ்ந்தவா் என்பதும், குடும்பத் தகராறில் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.